அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் உயரும் : நாசா தகவல்

nasa_5

பருவநிலை மாற்றம் காரணமாக, அடுத்த 100 ஆண்டுகளில் பூமியின் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடல் மட்டத்தின் உயர்வு தடுக்க முடியாதது என்றும், ஆனால் அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது என்றும் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த  2013ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடு அரசுகளின் குழு கடல் மட்டம் உயர்வு பற்றி ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என்று கூறப்பட்டிருந்தது.

கிரீன்லாந்து  மற்றும் அண்டார்டிகாக பகுதியில்,பனிப்பாறைகள் உருகியதால் கடந்த 1992 ஆம் ஆண்டு கடல்மட்ட அளவு, 3 அங்குலமாக உயர்ந்துள்ளது. உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரையிலான கடல் மட்ட உயர்வு அளவுகளைப் பார்க்கும்போது, இப்போதிருக்கும் வேகத்திலேயே பனிப் பாறைகள் உருகினால், நிச்சயமாக இன்னும் 100 அல்லது 200 ஆண்டுகளில் உலகளாவிய கடல் மட்டத்தின் அளவு 10 அடி உயரும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Courtesy : News7Tamil

Read more: http://ns7.tv/ta/sea-level-rise-next-100-years-nasa-information.html#ixzz3k5XjTyxj

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.