இயற்கையாகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மரங்கள் ஏராளமாக உள்ளன. மனிதன் ஆக்சிஜன் இல்லையென்றால் உயிர் வாழ்வது மிகவும் கடினமானதாகும். ஆக்சிஜன் மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகிறது . உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஆக்சிஜனால் செயல்படுகிறது.
போதுமான அளவு ஆக்சிஜன் மூளைக்கு வழங்கப்படவில்லை என்றால் மூளையின் செயல்பாடு குறைந்துவிடும். இவ்வாறு மூளையின் செயல்பாடு குறைந்தால் பக்கவாதம் வரக்கூடும்.
புற்றுநோய் மற்றும் பல நோய்களின் காரணிகள் ஆக்சிஜன் மூலம் அழிக்கப்படுகின்றன. எனவே ஆக்சிஜன் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக நம்முடைய வாழ்க்கைக்கு செயல்படுகிறது.
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறான். ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் விலை 700 ரூபாய். மூன்று சிலிண்டர்களின் விலை ரூ. 2100. ஒரு ஆண்டு கணக்கு பார்த்தால் ரூ.7, 66,000 மதிப்பிலான ஆக்சிஜனை சுவாசிக்கிறான். மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 ஆண்டுகள் என்றால் ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இவ்வளவு மதிப்பு மிக்க ஆக்சிஜனை மரங்கள்தான் நமக்கு இலவசமாக தருகிறது.
மரங்கள் இருப்பதால்தான் மனித இனமும் பிற உயிரினங்களும் பூமியில் வாழ்கின்றன. அப்படியானால் மரங்களுக்கு எந்தளவிற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும். மரங்கள் இயற்கை தந்த பொக்கிஷம் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஒரு மரம் தன் வாழ்நாளில் ஆயிரம் கிலோ கார்பன்டை ஆக்சைடை கிரகித்து கொள்கிறது. பல ஆண்டுகளாக நாடு வறட்சியை சந்தித்து வருகிறது.
ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தாவரங்கள்:
1.முளைகள்:
நீங்கள் உணவிற்காக முளைகளை வீட்டில் வளர்கிறீர்களா? அதாவது (பட்டாணி முளைகள், buckwheat முளைகள் மற்றும் சூரியகாந்தி முளைகள் ). இந்த முளைகள் நீங்கள் வாழ்கின்ற இடத்தில் ஒரு அற்புதமான மினி கிரீன்ஹவுஸ் விளைவை ஏற்படுத்தும். நீங்கள் இந்த முளைகளை சாப்பிடுவதன் மூலம் தேவையான ஆக்சிஜன் வாய்வழியாக நமக்குள் செல்கிறது.
2.பாம்பு தாவரம்:
இந்த தாவரம் அனைத்து வழிகளிலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. இந்த தாவரம் இரவில் நிறைய CO2 (carbon dioxide) to O2 (oxygen) ஆக மாற்றுகிறது. இந்த பாம்பு தாவரம் காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைடு நீக்குகிறது.
3.பாக்கு மரம்:
இந்த பாக்கு மரம் காற்றில் இருந்து சைலீன் மற்றும் டொலுவீனை அகற்றுகிறது. பகல் நேரத்தின் போது இந்த மரம் CO2 (carbon dioxide) to O2 (oxygen) மாற்றுகிறது.