மக்கள் தொகை பெருக்கத்தாலும் அளவுக்கு அதிகமான ஆற்றல் உபயோகிப்பதாலும் இன்னும் 582 வருடங்களில் நமது பூமி முழுவதும் அக்னி குண்டம் போல் எரிந்து போகும் – விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அதிர்ச்சி தகவல்
ஆண்டுக்கு ஆண்டு புவி வெப்பமயமாகி வருகிறது என்றும் இயற்கை பேரிடர்கள், கடல் மட்டம் கூடுதல் முதலியவை நடந்து வருகிறது என்பதும் ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அறிவித்த ஒன்று. எனவே புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் பரவலாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் இன்னொரு அதிர்ச்சி தகவலை இன்னொரு விஞ்ஞானி குறிப்பிடுகிறார்.
இப்பூமி பந்தில் ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை பெருக்கம் கூடிக் கொண்டே வருகிறது. எனவே அவர்களது உபயோகத்திற்கு இயற்கை வளங்கள், மின் ஆற்றல் முதலிய அனைத்தும் அளவிற்கு அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2600-ம் வருடத்தில் நமது பூமி அக்னி குண்டமாகி எரிந்து போகும் என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் குறிப்பிடுகிறார்.
இதனால் பூமியில் உயிரினங்கள் மற்றும் தாவர வகையில் வாழமுடியாத சூழ்நிலை ஏற்படும். அனைத்தும் அழியும். ஆனால் மனிதர்கள் நினைத்தால் இன்னும் 10 இலட்சம் ஆண்டுகளுக்கு உயிர்வாழ முடியும் எனவும் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.
அதாவது மனிதர்கள் சூரிய மண்டலத்தில் மிக அருகேயுள்ள ஆல்பா சென்டாரி என்ற துணை கிரகத்தில் குடியேறலாம் அல்லது பூமிக்கு அருகேயுள்ள புளூட்டோவுக்கு சென்று தங்கலாம்.
இவற்றில் சூரிய மண்டலத்துக்கு அருகேயுள்ள ஆல்பா சென்டாரி துணை கிரகம்தான் சிறந்தது என தான் கருதுவதாகவும் இக்கிரகம் பூமியில் இருந்து 400 கோடி மைல் தொலைவில் உள்ளது எனவும் இது செவ்வாய் கிரகத்தை விட குறைந்த தொலைவில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்கிரகத்துக்கு சிறிய விமானத்தில் ஒரு வாரத்திற்குள் செல்ல முடியும். எனவே அதற்கான ஏற்பாட்டை இன்னும் 20 ஆண்டுகளில் செய்து முடித்துவிடுங்கள் என்று யற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பெய்ஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது கூறியுள்ளார்.
Source : https://www.cnbc.com/2017/11/07/stephen-hawking-humans-will-turn-earth-into-a-giant-ball-of-fire-by-2600.html