முன்னொரு காலத்தில் ஆற்று மணல் தனியார் ஏலத்தில் அள்ளினார்கள். மாவட்டத்தில் பல குத்தகைதாரர்கள் இருப்பார்கள். இரண்டு மீட்டர் ஆழத்திற்கு மேல் மணல் அள்ளக் கூடாது. மிஷின் கொண்டு மணல் அள்ளக் கூடாது. காலை 6.00 முதல் மாலை 6.00 வரை மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் உண்டு. நிபந்தனை மீறப்பட்டால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார். எனவே அஞ்சி அஞ்சி பலர் சரியாக மணல் அள்ளினார்கள். சிலர் திருட்டுதனமாக நிபந்தனை மீறி அள்ளினார்கள். இவை அனைத்தையும் ஒரு சேர கபளீகரம் செய்ய அரசு திட்டமிட்டது. அதற்கென ஒரு நபர் மூலம் ஒரு வழக்கை தாக்கல் செய்து அரசுக்கு வேண்டிய ஒரு அதிகாரியை ஆணையராக நியமித்து அவர் மூலம் அரசே மணல் அள்ள வேண்டும் என அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வைத்து உயர்நீதிமன்றம் அதனை ஒப்புக் கொண்டு உத்தரவு பிறப்பித்தது. உடனடியாக அரசு பொதுப்பணித்துறை மூலம் மணல் அள்ளப்படும் என கூறியது. விளைவு அரசுக்கு ஒரு லோடுக்கு ரூபாய் 700 மட்டும் கட்டிவிட்டு ஒரு லோடு மணலை ரூபாய் 50000-த்திற்கு வேறு மாநிலத்திற்கு கடத்துவதன் மூலம் அரசியல்வாதிகளுக்கு தினசரி பல நூறு கோடி ரூபாய் சட்டவிரோத வருமானம் கிடைத்தது. காலம் தாழ்ந்த பிறகு தான் இந்த சூழ்ச்சி உயர்நீதிமன்றத்திற்கும் மற்றவர்களுக்கும் தெரிய வந்தது. தற்போது உயர்நீதிமன்றம் சரித்திர முக்கித்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. இதை பாராட்ட வேண்டும். ஆனால் இதே போல் ஏகபோகமாக கொள்ளை அடிக்க தாது மணலுக்கு அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளார்கள். இது எப்போது திருத்தப்படும்?