புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதும் பாதிக்கப் படுகிறது. அதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கு அல்ல. 2100 ஆண்டு வாக்கில் கடல் நீர் மட்டம் சுமார் ஒன்றரை மீட்டர் வரை உயரும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. இதனால் அமெரிக்காவில் ஏராளமான நகரங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் கடல் நீர் மட்ட உயர்வால் எவ்வளவு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற விபரத்தையும், குடியிருப்புகள் எவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளன என்றும் இணைப்பில் உள்ள செய்தியும் படமும் தெரிவிக்கிறது.