கடலரிப்பு சில உண்மைகள்

புவி வெப்பமயமாதல், ஆறுகளின் மூலம் கடலுக்கு அடித்து வரப்படும் மணல் ஆறுகளிலேயே எடுக்கப் படுவது, செயற்கை முறையில் தடுப்பணை, மற்றும் வளர்ச்சி திட்டங்களான துறைமுகம் முதலியவை கட்டுவது ஆகியவை தான் கடலரிப்புக்கு முக்கியமான காரணம். இந்தியா முழுவதும் உள்ள 7500 கிலோ மீட்டர் கடற்கரை பகுதியில் சுமார் 1500 கிலோ மீட்டருக்கு அதிகமாக கடலிப்பு உள்ளது.

 

“குமரி முதல் நீரோடி வரை உள்ள பகுதி இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது”. இவர்கள் உரிய சுற்றுச்சூழல் அனுமதி எதுவும் இன்றி இயக்கி வருவது கடலரிப்புக்கு ஒரு காரணம். அளவிற்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதும் மழை அளவு குறைவதும் தான் நிலத்தடி நீர் உட்புகுவதற்கு ஒரு காரணம். மணல் திட்டுகள் இருக்கும் பகுதிகளில் சுரங்க குத்தகைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அதே போல் கடலரிப்பு, சுனாமி போன்ற எந்த பாதிப்பும் சுற்றுச்சூழல் அனுமதியோடு இயங்கும் தனியார் சுரங்க பகுதிகளை பாதிக்கவில்லை.

2004-ம் வருடம் ஏற்பட்ட சுனாமியிலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தனியார் சுரங்க குத்தகை பகுதிகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக குத்தகை வழங்கப் படாத இதர பகுதிகளில் தான் பாதிப்பும் அதிகம். உயிர் சேதமும் ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் சட்டவிதிகளை கடைபிடித்து புவியியலாளர் மற்றும் பொறியாளர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் சுரங்க பணி மேற்கொள்வதால் இப்பகுதியில் பாதிப்பு இல்லை.

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் முழு பகுதியுமே “sheet Rock” என ஒரு படிமபாறை உள்ள பகுதி. இதனை தாங்கள் இந்திய அரசின் வரைபடத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். எனவே இந்த பகுதியில் கடலரிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.