அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையில் கண்ணாடி கற்கள் போல் பலவண்ண கற்கள் கரை ஒதுங்குகிறது. இந்த வீடியோவை Must Do Travel என தனியாக ஒரு முகநூல் ஏற்படுத்தி சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். கன்னியாகுமரியிலும் வடநாட்டு சுற்றுலா பயணிகளிடம் கடற்கரையில் இயற்கையாக ஒதுங்கும் கார்னட் மணலை சேகரித்து பகவதி அம்மனின் குங்குமம் என்ற பெயரில் சிறு பாக்கெட்டுகளில் விற்பார்கள். தமிழ்நாட்டிலும் இயற்கையாக கடல் இவ்வாறு கறுப்பு, சிகப்பு மணல்களை கரை ஒதுக்குகிறது. தனி கருப்பாக அல்லது தனி சிகப்பாக கடற்கரை இருக்கும். மணவாளக்குறிச்சி, மிடலாம், குளச்சல், ஆரோக்கியபுரம், கூட்டபுளி போன்ற பகுதிகளில் இவ்வாறு ஏராளமாக பார்க்கலாம். தமிழக சுற்றுலா துறையும் இயற்கை அன்னையின் இயற்கை கொடையை இவ்வாறு வீடியோ செய்து சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு உபயோகிக்கலாம். இதனை இங்கு பதிவு செய்ததற்கு முக்கிய காரணம் இவ்வளவு பெரிய கல் வடிவத்தில் இருக்கும் பொருட்களையே கடல் வெளியே கொண்டு ஒதுக்கும் போது தாது மணலை ஒதுக்குவதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை தானே.. இந்த உண்மையை அனைவரும் தெரிய தான் இந்த பதிவு பதியப்பட்டுள்ளது.
Posted by Must Do Travels on Saturday, 10 February 2018