கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், புதிய வீடுகளை கட்டித் தரக் கோரி, அரசு அதிகாரிகளை சிறைபிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது. குறிப்பாக சின்னத்துறை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 15 அடி முதல் 20 அடி உயரத்திற்கு அலைகள் எழும்புவதால் தடுப்புச் சுவர்களை உடைத்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்து வருகிறது.
20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களில் உரிய நிவாரணம் மேற்கொள்ளவில்லை எனவும், பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு நிவாரண முகாம்களை ஏற்படுத்தி தரவில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வந்த அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் துறை ஆய்வாளர் உள்ளிட்டோரை அப்பகுதி மக்ககள் அங்கிருந்து அழைத்து சென்றனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
Link : http://ns7.tv/ta/people-demand-new-houses-affected-sea-erosion.html