கடல் சீற்றம் காரணமாக வீடுகள் இடியும் நிலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாக 50 க்கும் மேற்பட்ட வீடுகள் இடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது .இந்நிலையில் இரு தினங்களாக கடல் சிற்றம் அதிகமாக காணபடுகிறது இரையுமன்துறை, தூத்தூர் போன்ற பல்வேறு மீனவ கிராமங்களில் விடுகளில் கடல் தண்ணிர் புகுந்துள்ளது .
இரவிபுத்தன்துறை கடலோர கிராமத்தில் ஐந்து விடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் ஐம்பதுக்கு மேற்பட்ட விடுகள் இடியும் நிலையில் உள்ளது . இதனால் மீனவ மக்கள் இரவு வேளைகளில் ஆலயங்கள் வெளி இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் கடல் அலை தடுப்பு சுவர் மற்றும் இந்த மீனவர்களுக்கு தங்க மாற்று இடம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை மீனவர் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.