கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சனிக்கிழமை படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கம்போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்கியது.
திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 10 அடி உயரத்துக்கும் மேல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. இதனால் அங்கு பிற்பகல் 1 மணி வரை படகுகள் இயக்கப்படவில்லை.
கடல் சீற்றம் ஓரளவுக்குத் தணிந்ததையடுத்து, பிற்பகல் 1.15 மணி முதல் மாலை 4 மணி வரை திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் இயக்கப்பட்டன. விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.
படகுத்துறைக்குச் செல்ல நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர். படகு சேவை பாதிக்கப்பட்டதால் அவர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
Link : http://www.dinamani.com/tamilnadu/2015/07/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-/article2927958.ece