கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே இரண்டு மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக 100- க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்த மீனவ கிரமங்களில் உள்ள குடிநீர் சேமிப்பு மேல்நிலை தொட்டி கடல் சீற்றத்தால் சேதமடைந்துள்ளதால் குடிநீர் கிடைக்காமல் தவிப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், தொடர்ந்து கடல் சீற்றத்திலிருந்து பாதுகாக்க, தூண்டில் வளைவு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
See :