குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கு கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற் பட்டது. அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்தன. நேற்று இரவும் இதே நிலை நீடித்தது. இன்று காலையில் மாவட்டத்தின் மேற்கு கடற்கரை முழுவதும் கடல்சீற்றம் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்தது.
பிள்ளைத்தோப்பு, அழிக்கால் கடற்கரை கிராமங்களி லும் கடல்நீர் புகுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அழிக்கால் பகுதியில் கடற் கரையையட்டி குடியிருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. வழக்கத்தை விட அதிகமாக கடல் நீர் வந்ததால் வீடுகளில் இருந்தபொருட்கள் தண்ணீரில் அடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதைக்கண்டு குழந்தைகளும் பெண்களும் அலறினர்.
தகவல் அறிந்து மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துச் சென்றனர். அழிக்கால் பங்குதந்தை, உதவி பங்குதந்தை ஸ்டார்லின் மற்றும் ஊர் நிர்வாகிகளும், கடல் நீர் புகுந்த வீடுகளில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள திரு மண மண்டபத்தில் தங்க வைத்த னர்.
அழிக்காலில் ஏற்பட்ட கடல் சீற்றம் போல மிடாலம் பகுதியிலும் இன்று கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்தது. நீரோடி, தூத்துர், இரையு மன்துறை, மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, தேங்காய் பட்டணம், அரையன்தோப்பு, மண்டைக்காடு புதூர் பகுதிகளிலும் இதேநிலை காணப்பட்டது.
இப்பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்ட கடல்கொந்தளிப்பு மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடற்கரையில் இருந்த பெரும்பாலான தடுப்பு சுவர்களில் இருந்த கற்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டது.
இவற்றை உடனடியாக சீரமைத்து தடுப்பு சுவர் அமைப்பதோடு, ஆங்காங்கே தூண்டில் வளைவுகளும் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடல் சீற்றம், கொந்தளிப்பு காரணமாக இன்று பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வில்லை. அவர்களின் படகுகள், வள்ளங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அனைத்தும் கடற்கரையில் இருந்து பத்திரமான இடத்திற்கு அப் புறப்படுத்தப்பட்டது.கடல்சீற்றம் பாதித்த அழிக்கால் பகுதியில் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் நேரில் சென்று பார்வை யிட்டார். அவருடன் அ.தி. மு.க. நிர்வாகிகளும் உடன் சென்றனர்.