கடலோர மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு,; கடல் தரும் இயற்கை செல்வங்கள், மீன் வளம், மீனவர் நலன், பொது சுகாதாரம், மற்றும் கடற்கரை அல்லது நீர்நிலைகளோடு தொடர்புடைய ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து விருப்பம் உள்ளவர்கள் குறும்படங்கள் தயாரித்து அனுப்பலாம். அவை coastalenv.01@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பலாம்.
குறும்படங்கள் குறைந்த பட்சம் 5 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 20 நிமிடங்கள் வரை இருக்கலாம். அரசியல், தனிநபர் தாக்குதல் இருக்க கூடாது. தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று குறும்படங்களுக்கு முறையே ரூபாய் 25000, 15000, மற்றும் ரூபாய் 10000 ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கப்படும். நடுவர் குழு அங்கீகரிக்கும் அடுத்த ஐந்து குறும்படங்களுக்கு ரூபாய் 1000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். குறும்படங்கள் ஏற்கனவே வெளிவந்தவையாகவோ இதர நபர்களுக்கு உரிமை உள்ளதாகவோ இருக்க கூடாது. அனுப்புபவர் அந்த குறும்படம் தனக்கே உரிமை என்பதை உறுதி செய்யும் கடிதம் அல்லது மின்அஞ்சல் உறுதிமொழி அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் பரிசு பெறும் குறும் படங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பப் படும். அதற்கு தனியாக எந்த தொகையும் வழங்கப்படாது. பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்படும். போக்குவரத்து மற்றும் தங்கும் செலவு என மொத்தம் ரூபாய் 1000 மட்டுமே வழங்கப்படும். மின் அஞ்சலில் அனுப்பும் போதே கைபேசி எண்ணையும், விலாசத்தையும் தெரியப்படுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் சான்று பெறும் குறும்படங்களை கட்டணம் இல்லாமல் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மீடியாவில் வேண்டுமானாலும் தயாரிப்பு, இயக்கம் போன்ற நபர்களின் பெயருடன் இலவசமாக வெளியிடும் உரிமை எங்கள் கமிட்டிக்கு உண்டு. இதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் இழப்பீடு கேட்க முடியாது. இதற்கு சம்மதிப்பவர்கள் சுற்றுச்சூழல் போன்ற சமூக நோக்கம் கொண்ட குறும்படங்களை தயாரித்து அனுப்பலாம்.