கேரளா மாநிலத்தில் 60 சதவீத கடற்கரை கடலரிப்புக்கு உள்ளாகி உள்ளது.

கேரளா மாநிலத்தில் 60 சதவீத கடற்கரை கடலரிப்புக்கு உள்ளாகி உள்ளது. விஞ்ஞானிகளின் ஆய்வு படி இந்த கடலரிப்புக்கு கடல் நீர் மட்டம் உயர்வது மற்றும் மழை காலங்களில் ஏற்படும் புயலால் உருவாகும் வருடாந்திர கடலரிப்பு மட்டும் காரணம் அல்ல. மாறாக நகரமயமாக்கல், சுற்றுலா, மற்றும் இயற்கைக்கு முரணான கடலரிப்பு தடுப்பு அமைப்புகள் ஆகியவையும் காரணம். இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் தற்போது உருவாக்கும் கடலரிப்பு தடுப்பு சுவர்களை அமைப்பதை நிறுத்தி வைக்க கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா முதலிய தென்மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு விஞ்ஞானபூர்வாக எப்படி தடுப்பு அமைப்பது என ஒரு திட்டத்தை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.

கடலரிப்பில் பாதிக்கப் பட்டவர்களுக்கு மற்றும் கடற்கரையில் இருந்து 50 மீட்டருக்குள் உள்ள நபர்களுக்கு கேரளா அரசு வீடு கட்டிக் கொள்ள ஆறு லட்சம் ரூபாயும், நிலத்திற்கு நான்கு லட்சம் ரூபாயும் என மொத்தம் பத்து லட்சம் ரூபாய் வழங்குகிறது. ஆனால் அதனை பெற்றுக் கொண்டும் யாரும் கடற்கரையை விட்டு நகர தயாராக இல்லை. விரிவான செய்தி ஆங்கிலத்தில் கீழே.

*********

 

Hard constructions continue to erode Kerala’s coastline, leaving communities stranded

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.