சிகப்பு நிறத்தில் மாறிய கடல் : அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

சிகப்பு நிறத்தில் மாறிய கடல் : அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் ஆஸ்திரேலியாவின் பொண்டாய் கடற்கரை நிறம் மாறிய வினோதம்

ஆஸ்திரேலியாவின் பொண்டாய் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது திடிரென தண்ணீரின் நிறம் சிகப்பாக மாறி சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. குளித்துகொண்டிருந்த சுற்றுலா பயணிகள் இந்தனை இரத்தம் என்று எண்ணி அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர்

இது ஒரு அறிய நிகழ்வாக கருதபடுகிறது .இந்த நிகழ்வால்  உலக புகழ் பெற்ற பொண்டாய் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது .இருந்தாலும் சிலர் மட்டும் பயம் கொள்ளாமல் அங்கே குளித்தனர்

 

கடலில் குளித்த சுற்றுலா பயணிகளை பார்க்கும் பொது இரத்ததில் குளிபவர்கள் போல் இருந்தது

article-2239040-163AE270000005DC-792_634x424

 

இதுகுறித்து ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகையில் : இது பொதுவாக நடக்ககூடிய ஒன்றுதான் என்றும் இது அதிக வெப்பம் மற்றும் அலையின் வேகத்தால் நடந்திருக்கலாம் என கூறினார் . மேலும் இது பாசிகளின் விளைவாக கூட இருக்கலாம் என்றும் தெளிவுபடுத்தினார்

மற்றும் ஒரு உள்ளூர் வாசி இது குறித்து கூறுகையில் : சிகப்பு பாசி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தகூடியவை என்றும் . இதனால் கண் எரிச்சல் மற்றும் தோல் தடித்தல் போன்ற பிரச்சனைகள் வர இருபதாக தெரிவித்தார்

article-2239040-163AE1E1000005DC-682_634x423

 

உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பொண்டாய் கடற்கரை விரைவில் சரியாகிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்

இந்தியாவிலும் கடல் நிறம் மாறிய நிகழ்வு :

இதே நிகழ்வு இந்தியாவிலும் நடைபெற்றுள்ளது என்பது குரிபிடத்தக்கது . இது தமிழகத்தின் தென் மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்துள்ளது .

 

இது குறித்து தமிழக மக்கள் அச்சம் கொண்டது குறிப்பிடத்தக்கது . ஆஸ்திரேலியாவில் இந்த நிகழ்வு  நடந்திருபதால் இது எல்லா கடலிலும் நடக்கும் ஒரு இயற்க்கை பிரச்சனைதான் என்று தெரியவந்துள்ளது

Source : http://tamilnewsbbc.com/2014/03/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF.html

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.