தாதுமணல் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஊராட்சித் தலைவர் வரவேற்பு

தாதுமணல் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஊராட்சித் தலைவர் வரவேற்பு

First Published : 01 August 2015 06:24 AM IST

தாதுமணல் அள்ள தடைவிதித்ததை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு க.நவ்வலடி (கரைசுத்து நவ்வலடி) ஊராட்சித் தலைவர் பி.சின்னதம்பி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:எங்கள் ஊராட்சிக்குள்பட்ட க.நவ்வலடி, வல்லன்விளை, தத்துவனேரி, ராமன்குடி, முத்துக்கிருஷ்ணாபுரம், சோடாவிளை, செம்பொன்விளை, மரக்காட்டுவிளை, காளிகுமாரபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் தாதுமணல் நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அங்கு பணிகள் நடைபெறாததால் வேலைவாய்ப்பின்றி தவித்து வந்தார்கள்.

இந்நிலையில் தாதுமணல் அள்ளுவதற்கு தடையை நீக்கியும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வு நடத்தவும் சென்னை உயர்நீதிமன்றத்தால் அண்மையில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் எங்கள் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 2 ஆண்டுகளாக பணி முடங்கிக் கிடந்த தொழிலாளர்களுக்கு இதன் மூலம் பணி கிடைக்கும் என்பதால் இந்த நடவடிக்கையை ஊராட்சியின் சார்பில் பாராட்டுகிறோம் என்றார் அவர்.

Courtesy : http://www.dinamani.com/edition_thirunelveli/thirunelveli/2015/08/01/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/article2951823.ece

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.