மக்கள் இயக்கங்களின்; தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட அணுமின் உலையின் அபாயங்களும், பேச்சிப்பாறைத் தண்ணீரின் முக்கியத்துவம் என்ற புத்தகத்தில் கடல் வளம் பாதிப்பு என்ற தலைப்பில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடன்குளத்தில் அணுமின் உலை வந்தால் கடல் வளம் பாதிக்கப்படும். மீன் வளம் குறையும். அன்னிய செலவாணியை அதிகமாக ஈட்டித் தரும் இறால், கல் இறால் போன்ற மீன்கள் குஞ்சாக இருக்கும் போதே அழிந்து விடும்.
அணுமின் உலைக் கோபுரத்தை குளிர வைக்கும் கோடிக்கணக்கான லிட்டர் கடல் நீர் மறுபடியும் கடலுக்கும் போகும் போது 5 முதல் 10 சென்டி கிரேடு வரை வெப்பம் அதிகரிக்கும். இதனால் கண்ணுக்கு தெரியாத உணவுச் சங்கிலியின் அடிப்படைத் தாவர அணுக்களான டயட்டம் அழிக்கப்படும். (கடலில் இவை தரையிலுள்ள மரங்களுக்கு உலையை சமமானவை). இவைகள் தான் சின்னஞ்சிறு ஜீவராசிகளின் உணவாக பயன்படுகின்றன. அணுமின் உலைக் கோபுரத்தை குளிர வைக்க நீர் உறிஞ்சப்படும் போது என்னற்ற ஜீவராசிகளும், முட்டைகளும் அழி;க்கப்படுகின்றன.
இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பது தாது மணல் குவாரியால் கடல் வளம் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்கிறது. இதனால் தான் மணவாளக்குறிச்சி மீனவ கிராம பேரூராட்சி தலைவி தாது மணல் சுரங்கத்தால் பாதிப்பு இல்லை என கூறி உள்ளார்.