தாது மணல் பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தென்மண்டல கட்டுமர மீனவர் இளைஞர் சங்கம் வரவேற்பு
தென்மண்டல கட்டுமர மீனவர் சங்க தலைவர் திரு.எம்.ராஜா பெர்னான்டோ அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழ்நாட்டில் தாது மணல் தொழில் சுதந்திரத்திற்கு முன்பாகவே தொடங்கி நடந்து வரும் தொழிலாகும். நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டியால் சில நபர்கள் பெரும் பண செலவில் இது பற்றி புகார்கள் அனுப்பி சில ஓய்வு பெற்ற அலுவலர்களின் மற்றும் சில ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் தலையீட்டால் ஒரு கட்டத்தில் அதாவது சுமார் 2 வருடங்களுக்கு முன்பு இந்த தொழில் நிறுத்தி வைக்கப் பட்டது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்ததோடு மீனவ மக்களும் சொல்லொண்ணா துயரத்திற்கு உள்ளானார்கள்.
இந்த தாது மணல் என்பது இயற்கையாக வெளியே கொண்டு தள்ளும் மணல். இதனை எடுக்காமல் விட்டால் சில பகுதிகளில் மணல் மேடுகளை உருவாக்கி விடும். இரண்டு வருடங்களாக தாது மணலை எடுக்காததால் தான் பல்வேறு பகுதிகளில் கடலில் மணல் மேடுகள் உருவாகி மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மணப்பாடு பகுதியில் இவ்வாறு மணல் மேடு உருவாகி மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் அரசு பிறகு ஜேசிபி இயந்திரங்களை கொண்டு இந்த மணலை அள்ளி அகற்றியது கடந்த 21.7.2015 அன்று எல்லா பத்திரிக்கைகளிலும் வெளியானது தெரிந்ததே!!
தாதுமணல் தொழில் நடந்து கொண்டு இருந்தால் இவ்வாறு மணல் மேடு உருவாகாது. எனவே மீனவர்களும் பாதிக்கப் பட மாட்டார்கள். இந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம்.
மேலும் ஒரு அதிகாரி அல்லாமல் ஒரு வடநாட்டு நீதிபதியை நியமித்ததால் இதில் அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமான ஒரு விசாரணை நடைபெறும். அனைவருடைய நலனும் கருத்தில் கொள்ளப்படும். எனவே இந்த வகையிலும் இதனை நாங்கள் வரவேற்கிறோம்.