திருவொற்றியூர், எண்ணூரில் நேற்று முன்தினம் முதல் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் அந்தமான் தீவுக்கு வடக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
திருவொற்றியூர், எண்ணூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. கடலில் உருவான ராட்சத அலைகள், தடுப்பு பாறாங்கற்கள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதனால் கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் வீடுகளை காலி செய்து, உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ள னர். மேலும் தங்களது பைபர் படகு, மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.
கடல் சீற்றத்தால் நல்லதண்ணீர் ஓடை குப்பம், இந்திராகாந்தி குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை.