நெல்லை மாவட்டம் களக்காடு அருகே குளத்தில் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிங்கம்பத்து கிராமத்தில் குட்டியான் குளம் உள்ளது. கடந்த சில மாதங்களாக குளத்தில் தண்ணீர் இன்றி காணப்பட்ட நிலையில், சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குளத்தின் தண்ணீர் நிறம் மாறி, சிவப்பு நிறத்தில் காட்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், நோய் பரவும் அபாயம் நிலவுவதாகவும் கூறுகின்றனர். சுகாதார துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Courtesy : http://ns7.tv/ta/water-pond-near-nellai-changed-red-colour.html