பருவநிலை மாற்றத்திற்கு வளர்ச்சியடைந்த நாடுகள்தான் முக்கிய காரணம் என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். எனவே அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் வளரும் நாடுகளுக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் நெருக்கடி கொடுக்க கூடாது என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பருவநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் புவி வெப்பத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது.
சுமார் 150 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள்தான் புவி வெப்பமடைதலுக்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டார்.
புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நாடுகள் அதிக பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய மோடி, இந்த விவகாரத்தில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீது அதிக நெருக்கடியை கொடுத்து வளர்ச்சியை தடுத்துவிடக் கூடாது என்று வலியுறுத்தினார்.
Thanks : News 7 Tamil
Link : http://ns7.tv/ta/main-cause-climate-change-developed-countries-modi.html