புவி வெப்பமடைதலால் தீவுகள் மூழ்கும் அபாயத்தை தடுத்து நிறுத்த இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்குள்ள இந்திய வம்சாவழியினரிடையே உரையாற்றினார். புவி வெப்பமடைதலால் உலகிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விளக்கிய மோடி, இந்தியாவின் எரிசக்தி தேவை சுற்றுசூழலுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் நிறைவேற்றிக்கொள்ளப்படும் என்றார்.
புவிவெப்பமடைவதால் கடல் நீர்மட்டம் உயர்ந்து தாங்கள் மூழ்கிவிடுவோமோ என்கிற அச்சத்தில் சில தீவுகள் இருப்பதை கூறிய மோடி அதனைத் தடுத்து நிறுத்த இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை செய்யும் என்றார்.
Courtesy : http://ns7.tv/ta/india-will-not-create-any-problems-climate-change-modi.html