புவி வெப்பமயமாதலால் கடல் நீர் மட்டம் உயர்கிறது. இதனால் கடலரிப்பு, கடலோர கிராமங்களுக்கு ஆபத்து மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. புவி வெப்பமயமாதலில் மின் உற்பத்தியும் ஒரு முக்கியமான காரணம். நீர் மின் உற்பத்தி போக அனல் மின் உற்பத்தி மற்றும் அணுமின் உற்பத்தியும் கூட புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணம். சூரிய மி;ன் சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி புவி வெப்பமயமாதலை குறைப்பதற்கு உதவும். உலகம் முழுவதும் இதனால் காற்றாலை மின்சக்திக்கும் சூரிய மின்சக்திக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலும் குஜராத் மாநிலத்தில் 2012 முதலே 214 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் 4 கெகாவாட் மின்உற்பத்தி செய்ய திட்டமிட்டு 2014-ல் மின்உற்பத்தி தொடங்கும். * http://www.world-nuclear.org/
குஜராத், ராஜஸ்தான் போல் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு முன்னுரிமை கொடுப்பதை மற்ற மாநில அரசுகளும் பின்பற்றினால் புவி வெப்பமயமாதலை நாமும் தடுப்பதற்கு நம்மாலான பங்களிப்பை செய்ததாக அமையும்.