கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் மணவாளக்குறி வரையிலான அரபிக்கடல் பகுதிகள் நேற்று முதல் திடீரென கரும் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது
கடல் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும் நிலையில் கடல் அலையால் ஏற்படும் நுரையும் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம் வீசி வருகிறது
இரண்டாவது நாளாக இன்றும் குளச்சல் முதல் மணவாளக்குறிச்சி கோடிமுனை உள்ளிட்ட கடல் பகுதிகள் பச்சை நிறத்திலேயே காட்சியளிக்கும் நிலையில்
கடல் பகுதிகளில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்து வருகிறது
சிறிய வகை குஞ்சு மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை கொத்து கொத்தாக செத்து மிதப்பதோடு கடல் அலைகளால் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கும் நிலையில் துர்நாற்றமும் வீசி வருகிறது
தொடர்ந்து மீன் குஞ்சுகளும் செத்து கரை ஒதுங்கும் நிலையில் மீன் வளம் கடுமையாக பாதிப்படையும் என அச்சமடைந்துள்ள மீனவர்கள்
மீன்கள் செத்து கரை ஒதுங்குவதற்கு பூங்கோரை பாசிகள் தான் காரணமா? இல்லை கடலில் கப்பல் மூலம் கொண்டு வந்து கொட்டப்படும் ரசாயண ஆலை கழிவுகள் காரணமா? என மீன்வளத்துறை மற்றும் மத்திய கடல் ஆராட்சி நிறுவனமும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.