மனிதத்தவறுகளால் அழியும் கடல் வாழ் உயிரினங்கள் : அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை

மனிதத்தவறுகளால் அழியும் கடல் வாழ் உயிரினங்கள் : அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை

marine

1970 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து விட்டது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக வன உயிரின ஆராய்ச்சி மையமும், லண்டன் உயிரியல் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில், 1970 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை 50% குறைந்துள்ளது என்னும் அதிர்ச்சி விவரம் தெரியவந்துள்ளது.

அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள், கார்பன் கழிவுகளைக் கொட்டுவதாலும், மனிதத்தவறுகளின் விளைவாக, புவி வெப்பமடைவது, கடல் நீர் மாசடைவது, உணவுக்காக கடல் வாழ் உயிரினங்களை அழிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடல்வாழ் உயிரினங்கள் குறைந்து வருவதாக இந்த அமைப்புக்கள் சமர்பித்துள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுக்காக மீன்களைப் பிடிக்கும் விகிதம், அவை இனப்பெருக்கம் செய்யும் விகிதத்தை விட அதிகமாக இருப்பதால் சில வகை மீன்கள் மட்டும் 74% வரை குறைந்துள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: http://www.ns7.tv/ta/decreasing-marine-creatures-astounding-thesis.html#ixzz3lu5EEzvD

Courtesy : News 7 Tamil.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.