டெல்லி ஐஐடி-யில் இருந்து ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் தொழிற்சாலை புகையால் இந்தியாவில் இமயமலை பகுதியில் 1.7 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் கூடி உள்ளதும் அரபி கடல் பகுதியில் 0.7 டிகிரி செல்சியசும், மன்னார் வளைகுடா (கிழக்கு கடற்கரை) பகுதியில் 0.5 டிகிரி செல்சியசும் வெப்பம் கூடி இருப்பதை கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த வெப்பத்தால் இமயமலையில் உள்ள பனிகட்டி அடுக்குகள் உருகி வருகின்றன என்பதையும் இதனால் பருவநிலை மாற்றம் ஏற்படும் என்பதையும் விரிவாக தெரிவித்துள்ளார்கள்.
கிழக்கு கடற்கரை என்றால் தமிழ்நாடு ஆந்திரா ஆகியவையும் உள்ளடக்கும். எனவே நாம் தான் வெப்பம் கூடுவதில் மிக குறைந்த அளவு காரணியாக உள்ளோம் என சந்தோச பட முடியாது. வெப்பமயமாதலை குறைப்பதில் நமது பங்கு வேண்டும். எனவே தொழிற்சாலை புகையை கட்டுப்படுத்த ஏராளமான மரம் வளர்ப்பதும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வழிவகைகளை கடைபிடிப்பதும் சூரிய மின்சக்தி, காற்றாலை மின் உற்பத்தி ஆகியவற்றை பெருக்குவதும் இப்போதைய அத்தியாவசிய தேவை.
Source : https://indiaclimatedialogue.net/2018/06/14/human-activity-responsible-for-hotter-india/