மீன் உற்பத்தி துறையில் இந்தியா 2-வது இடம்

மீன் உற்பத்தி துறையில் இந்தியா 2-வது இடம்

koondu fish04சர்வதேச அளவில், மீன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனா உள்ளது. இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தி சீனாவின் உற்பத்தியில் 10 சதவீத அளவிற்கே உள்ளது என மீன்வளத் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மீன், கடல்பாசிகடந்த 2012-ஆம் ஆண்டில் சீனா மொத்தம் 5.70 கோடி டன் அளவிற்கு மீன்கள் மற்றும் கடல்பாசிகளை உற்பத்தி செய்தது. இது அந்நாட்டின் மொத்த கடல் உணவு பொருள்கள் உற்பத்தியில் 63 சதவீதமாகும். கடல்பாசி நீங்கலாக சீனாவின் மீன் உற்பத்தி 4.11 கோடி டன்னாக உள்ளது. அந்த ஆண்டில் இந்தியா 42 லட்சம் டன் மீன்களை உற்பத்தி செய்தது.இந்தியாவில் கடல்வாழ் உயிரினங்கள் மிகவும் குறைவாக உள்ளன. அதே சமயம் சீனாவில் வர்த்தக நோக்கில் 100-க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் வளர்க்கப்படுகின்றன.

இதனால் கடல் உணவுப் பொருள்கள் உற்பத்தியில் அந்நாடு முன்னணியில் உள்ளது. நம் நாட்டில் கடந்த 1991-92-ஆம் ஆண்டில் மீன் உற்பத்தி 41.57 லட்சம் டன்னாக இருந்தது. இது 2012-13-ஆம் ஆண்டில் 90.40 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்தல் 36 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதே சமயம் உள்நாட்டு நீர்நிலைகள் மற்றும் பண்ணைகளில் மீன் உற்பத்தி 234 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மீன் உற்பத்திக்கு வளமான வாய்ப்புகள் உள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் எடுத்து காட்டுகின்றன.

ஆனால் இந்த துறையில் இந்தியாவின் உற்பத்தி திறன் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். பொது கொள்கைஇந்த நிலையில் வர்த்தகரீதியில் மீன்களை ஏராளமாக வளர்ப்பதற்கேற்ற வகையில் பொது கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என இந்த துறையைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

source :http://epaper.dailythanthi.com/showxml.aspx?id=16391010&code=4355

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.