1997-ல் செய்த இல்லீகல் மைனிங் வழக்கிற்கு 2009-ல் உத்தரவு. 12-வருட காலதாமதத்திற்கு பொறுப்பானவர்கள் யார்?

தற்போது 3.9 மில்லியன் டன் இல்லீகல் மைனிங் செய்து அரசால் நடவடிக்கை எடுக்கப் பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் தயாதேவதாஸ் ஆகியோர் இயக்குனர்களாக இருந்த இந்தியன் கார்னட் சாண்ட் கம்பெனி 1997-லும் இதே போல் இல்லீகல் மைனிங் செய்து அதிகாரிகளால் கண்டுபிடிக்கப் பட்டது. தனது அரசியல் அதிகார பலத்தால் 12 வருடகாலம் காலதாமதம் செய்து இறுதியில் அந்த நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதத்தை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் 2009-ல் பிறப்பித்தார்.

இது வரை அந்த தொகை செலுத்தப்படவில்லை. அரசு அந்த தொகையை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாவட்ட ஆட்சி தலைவரின் உத்தரவு நகல் இதோ.Trichy Collector 55 lakhs penalty order to IGSC 22.1.09

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.