2 பில்லியன் ஆண்டுகளில், பூமி மீண்டும் தண்ணீரில் மூழ்கும்

2 பில்லியன் ஆண்டுகளில், பூமி மீண்டும் தண்ணீர் உலகமாக மாறிவிடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லண்டனை சேர்ந்த நேச்சர் ஜியோசைன்ஸ் என்ற ஆய்விதழ், பூமி தொடர்பாக ஆராய்ச்சி செய்து வந்தது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் 2 பில்லியன் ஆண்டுகளில் பூமி மீண்டும் ஒரு தண்ணீர் உலகமாக மாறிவிடும் என அவர்கள் கூறியுள்ளனர். ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேலோட்டின் தடிமனானது தனது அதிகபட்ச அளவான 40 கிலோ மீட்டரை எட்டிவிட்டதாகவும், அதன் பிறகு அதன் தடிமனாது குறைந்த வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உயிர்கள் தோன்றுவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே, சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் தண்ணீரிலிருந்து நிலம் வெளிவர தொடங்கியது. ஆனால் கண்டங்களின் மேலோடுகள் தொடர்ந்து அரிப்படைந்து வருவதால் கண்டங்கள் மீண்டும் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more: http://ns7.tv/ta/earth-sink-water-after-2-billion-years.html#ixzz3frGBd6B1