Tag Archives: beach minerals

தாது மணல் பிரச்சனை ஒரு தூண்டப்படும் பிரச்சனை

சமீபத்தில் முகநூலில் தாது மணலுக்கு எதிராக சில பதிவுகள் வந்தன. இதற்கு சில பதில்களும் விரிவாக வந்தன. அவற்றில் இருந்து தாது மணல் பிரச்சனை என்பது ஒரு தூண்டப்பட்ட பிரச்சனை என்பது தெளிவாக தெரிகிறது.

தாது மணலுக்கு முதன் முதலில் அனுமதி கொடுத்தது திமுக ஆட்சியில்; 1974-ல்.

எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் திருமதி.சந்தியா தாது மணலுக்கு எதிராக எழுதியதற்கான காரணம் அவரது கணவருக்கு வி.வி.நிறுவனத்திற்கு சொந்தமான நியூஸ் 7 தொலைகாட்சியில் தலைமை நிர்வாகி பணி கேட்டு அது கொடுக்கப்படாததால்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே சந்தியா தன் கணவருக்கு பணி தராவிட்டால் வி.வி.மினரல் நிறுவனத்தை தாக்கி எழுதுவேன் என மிரட்டி வந்ததை திரு.பாலகிருஷ்ணன் என்பவர் ஆகஸ்ட் 2014-லேயே பதிவு செய்துள்ளார். அதனை http://www.southernmines.org என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

க.புதூர் கிராமத்தில் வி.வி.நிறுவனத்திற்கு உரிமையான தொழிற்சாலை படத்தை எடுத்து பல்வேறு பதிவுகளில் உபயோகப்படுத்தப் பட்டு உள்ளது.

1974 முதல் நடந்து வரும் இந்த தொழிலில் பிரச்சனை எழும்புவதற்கு காரணம்.

தூத்துக்குடி திருமண்டல தேர்தலில் வி.வி.மினரல் திரு.வைகுண்டராஜன் நண்பரான திரு.எஸ்.டி.கே.ராஜனும் அவரது சம்பந்தியான டி.எஸ்.எப். பால்பாண்டியனும் போட்டியிட்டார்கள். டி.எஸ்.எப் சகோதரர் நிலா சீ பூட் சந்திரன் என்பவர் நிலா மைன்ஸ் என்று இதே தாது மணல் தொழிலுக்கு விண்ணப்பம் கேட்டு இந்த தொழிலில் இறங்குவதற்கு ஏற்பாடு செய்து வந்தார். இது சம்பந்தமாக வி.வி.மினரல் நிறுவனத்திற்கும், டி.எஸ்.எப் குரூப்க்கும் பகை ஏற்பட்டது.

தூத்துக்குடி முன்னாள் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.ஆஷிஷ்குமார் மனைவி மேற்கண்ட நிறுவனங்களில் வேலை பார்ப்பதாக எழுதி மாதம் பல லட்சம் பணமாக பெற்றார்கள். ஆஷிஷ்குமாரும் மணப்பாட்டில் இருந்து பெண் நண்பர்கள் வரும் போது ஒதுங்குவது டி.எஸ்.எப் பிளாசா தான். இரவில் மது அருந்துவதும் அவர்களோடு சேர்ந்து தான். இதனால் தான் அவர் மாறுதல் உத்தரவு வந்த உடன் அடுத்த நாள் திருமண்டல தேர்தலில் வைகுண்டராஜனை ஈடுபட விடாமல் தடுப்பதற்காக ஒரு பொய்யான ஆய்வறிக்கையை ஆய்வு செய்ததாக காட்டி தயாரித்தார். அந்த பொய்யான ஆய்வு அறிக்கையிலும் பெரியசாமிபுரத்தில் கனிம மணல் எதுவும் அள்ளவில்லை. ஆனால் வைப்பாரில் கடற்கரையில் இருந்து 600 மீட்டருக்கு அப்பால் கனிம மணல் அள்ளப்பட்டுள்ளது. அது வி.வி.யாக இருக்கலாம் என எழுதினார். உண்மையில் அந்த பள்ளத்தை ஒட்டி உள்ள உப்பள நிறுவனத்தினர் அந்த மணலை அள்ளி சென்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனை ஒட்டி உள்ள உப்பளங்கள் அனைத்தும் டி.எஸ்.எப் நிறுவன பங்குதாரர்களுக்கு உரிமை உள்ளவை ஆகும். அவர்கள் உப்பளத்திற்கும் அனுமதி பெறவில்லை. அங்கு அமைத்துள்ள மீன் பண்ணைக்கும் அனுமதி பெறவில்லை. உச்சநீதிமன்றம் மீன் பண்ணை அமைப்பதை ஏற்கனவே தடை செய்து ஆணை பிறப்பித்துள்ளது. இவ்வாறு உச்சநீதிமன்ற உத்தரவிற்கு விரோதமாக சுற்றுச்சூழல் அனுமதியின்றி இயங்கி வரும் மீன் பண்ணை பற்றி எந்த நபர்களும் வாய் திறக்கவில்லை. ஆய்வு செய்ததாக குறிப்பிடும் மாவட்ட ஆட்சி தலைவரும் அவரது கீழ் அதிகாரிகளும் இந்த சட்ட விரோத செயல்பற்றி அவர்கள் ஆய்வறிக்கையிலும் குறிப்பிடவில்லை. அறிக்கையிலும் குறிப்பிடவில்லை. பத்திரிக்கை பேட்டியிலும் ஆஷிஷ்குமார் அவரது நண்பரின் இந்த சட்டவிரோத செயல் பற்றி குறிப்பிடவில்லை. நண்பருக்கு உதவுவதற்காக வி.வி.மினரல் தான் இந்த மணலை அள்ளி இருக்கலாம் என ஒரு பொய் அறிக்கையை அவர் அனுப்பினார். பத்திரிக்கைளில் பேட்டியும் கொடுத்தார்.

தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதத்தை திரு.ஆஷிஷ்குமாரே புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு எடுத்து கொடுத்தார். தலைமை செயலருக்கு எழுதிய நேர்முக கடிதம் எப்படி தொலைகாட்சியில் காட்டப்பட்டது. இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை இது வரை யாரும் விளக்கவில்லை.

பிறகு திரு.வைகுண்டராஜன் அனைத்து ஆவணங்களையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று அனைத்து அலுவலர்களிடம் இருந்தும் இந்த அறிக்கைகள் எந்த ஆதாரமும் இன்றி தயாரிக்கப்பட்டது என்ற பதில்களையும் எழுத்து பூர்வமாக பெற்று திரு.ஆஷிஷ்குமார் மீது குற்ற வழக்கு தொடர அரசுக்கு மனு செய்தார்.

மேற்கூறிய விபரங்கள் http://www.beachminerals.org  என்ற இணையதளத்தில் ஆஷிஷ்குமார் மீது குற்ற வழக்கு தொடர தாக்கல் செய்த மனு ஒன்றாகவும், அவரது அறிக்கை பொய் என்பதற்கான ஆவணங்கள் மற்றொரு பதிவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமதி.சந்தியா மற்றும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஜார்ஜ் என்பவர் வேறு யாரும் அல்ல. டி.எஸ்.எப் பிளாசாவில் எஸ்.டி.டி.பூத் வைத்துள்ள ஒரு நபர். எனவே டி.எஸ்.எப் பிளாசா நபர்கள் சொல்கிற படி பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்தார்கள். இது தான் உண்மை.

பெரியசாமிபுரத்தின் முன்னாள் பஞ்சாயத்து பிரசிடெண்ட் ஜான் நாடார் அங்குள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு ஊர் பொதுமக்களை அனுபவிக்க விடாமல் தடுத்து வந்தார். இது சம்பந்தமாக உரிமையியல் வழக்கும் நடந்து வந்தது. பெரியசாமிபுரத்தில் அப்போது பங்குதந்தையாக இருந்து தற்போது இங்கிலாந்திற்கு பயிற்சி சென்றுள்ள பங்கு தந்தையோடு சேர்த்து கிராம மக்கள் பெரும்பான்மையோர் திரு.வைகுண்டராஜனை சந்தித்தார்கள். அங்குள்ள தேவாயத்திற்கு என நன்கொடை பெற்று சென்றார்கள்.

ஆனால் திரு.ஜான் நாடார் ஊர் மக்களுக்கு வைகுண்டராஜன் உதவுவதாகவும் அதனால் தான் வழக்கில் தனக்கு தோல்வி ஏற்பட்டதாகவும் கருதி அதில் இருந்து வி.வி.மினரல் நிறுவனத்திற்கு எதிராக தனக்கு வேண்டிய நபர்கள் மூலம் மனு கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பவர்.

பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்படும் ஜார்ஜ் என்பவரும் திரு.ஜான் நாடாரிடம் அடியாளாக இருப்பவர் தான். திரு.வைகுண்டராஜன் தலையீட்டால் தான் ஊராட்சி மன்ற தேர்தலில் தான் தோல்வி அடைந்ததாக கருதி கோபத்தோடு இருந்த ஜான் நாடாருக்கு திருமண்டல தேர்தலில் பாதிக்கப் பட்ட டி.எஸ்.எப் குரூப்பும், தனுஷ்கோடி ஆதித்தனின் பங்காளியான தயாதேவதாஸ் குரூப்பும் பண உதவி செய்வதால் அவர்கள் வாராவாரம் அலுவலகங்களுக்கு சென்று மனு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

திரு. ஆஷிஷ்குமாரிடமும் குஞ்சையாபுரம் பகுதியில் உள்ள மணலை அள்ளி வருவதாக ஒரு புகார் ஜான் நாடார் ஏற்பாட்டில் கொடுக்கப் பட்டது. இது சம்பந்தமாக கோவில் பட்டி கோட்டாட்சியர் திரு.ஜார்ஜ் என்பவரிடமே விசாரணை நடத்தி அவர் குஞ்யாபுரம் ஊர் பகுதியை ஒட்டி மணல் அள்ளக் கூடாது. குத்தகைக்கு ஒதுக்கப் பட்டுள்ள இதர பகுதிகளில் மணல் அள்ளுவதற்கு ஆட்சேபணை இல்லை என வாக்குமூலம் கொடுத்தார்.

கோட்டாட்சியர் மேற்கண்ட வாக்குமூலத்தையும், மேலும் பெரியசாமிபுரம் ஊர் பொதுமக்கள் இரண்டு பிரிவாக உள்ளார்கள். ஊராட்சி மன்ற தேர்தலை ஒட்டி உள்ள பகையில் தோல்வி அடைந்த பிரிவினர் எதிர்க்கிறார்கள் என்ற விபரத்தையும் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை செய்தார். இவை திரு. ஆஷிஷ்குமார் காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் கோப்பு எண் ஜி.எம்.1-532/2012 என்ற கோப்பில் அலுவலக குறிப்பில் உள்ளது. ஆஷிஷ்குமாரே அதில் உத்தரவு பிறப்பித்துள்ளார். யார் வேண்டுமானாலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அதனை பெற்று பார்க்கலாம்.

அந்த கோப்பிலேயே மரங்கள் வெட்டப்பட்டு கரி மூட்டம் வைக்கப்பட்டுள்ளதும் மற்றும் கடற்கரை அருகில் மணல் தோண்டிய பள்ளம் இல்லை. குத்தகை வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் பனை மரம் இல்லை என்பதற்கான புகைப்படங்களும் கோட்டாட்சியரால் எடுக்கப் பட்டு இணைக்கப்பட்டுள்ளன.

எனவே தாதுமணலுக்கு எதிராக பிரச்சனை உள்நோக்கத்தோடு திருமண்டல தேர்தலின் தோல்வியால் தூண்டப்படுகிறது.

தமிழகம் முழுவதும் வறட்சியால் பனை மரங்கள் அழிந்து வருகின்றன. பட்டாநிலத்தில் உள்ள பனை மரங்களை அந்தந்த நில உரிமையாளர்களே தமிழ்நாடு முழுவதும் பனை மரத்தை வெட்டி விற்பனை செய்வதை யாவரும் அறிவோம்.

சுpல தினங்களுக்கு முன்பு கூட பனை ஏறுவதற்கு ஆள் இல்லாததால் ஒரு கிலோ கருப்பு கட்டி ரூபாய் 250-க்கு விற்கிறது என ஒரு பதிவு முகநூலில் உடன்குடியை சேர்ந்த ஒரு சகோதரர்களால் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்திய அரசு அணுசக்தி துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையின் படி கிழக்கு கடற்கரையில் அதாவது கன்னியாகுமரிக்கு கிழக்கே எந்த பகுதியிலும் 0.03 சதவீதத்திற்கு அதிகமாக மோனோசைட் கிடையாது. 0.5 சதவீதத்திற்கு குறைவாக மோனோசைட் இருந்தால் அதனை பிரித்தே எடுக்க முடியாது.

மோனோசைட் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்ற கதை திரு.தயாதேவதாசிடம் பெரும் பணம் வாங்கிய ஓய்வு பெற்ற கல்வியாளர்களால் இட்டுக்கட்டப் பட்ட கதை. அவர்கள் வாங்கிய பணத்திற்கு இந்த கதையை ஜோடித்து வைத்து விட்டு சென்று விட்டார்கள்.

இராமனாதபுரம் மாவட்டத்திற்கு உப்பளத்திற்கு சொந்த டிராக்டரில் மண் அள்ளி செல்லும் நபர்களை மறித்து மிரட்டி மாமூல் கேட்டதில் காவல் துறையினர் அந்த மாமூல் கேட்ட நபர்களை கண்டித்து விட்டார்கள். மேலும் ஏற்கனவே ஏராளமான வாகனங்கள் சட்ட விரோதமாக அரசு நிலத்தில் மணல் அள்ளும் போது பிடிக்கப்பட்டு குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டு தற்போதும் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

திரு. அந்தோனிராயப்பன் போன்ற அனைத்து பேரும் டி.எஸ்.எப் நிறுவனத்தினரால் ஜோடிக்கப்பட்ட நபர்கள்.

திரு.விக்டர் ராஜமாணிக்கம் பொது நல வழக்கு பற்றி திருமதி.சந்தியா குறிப்பிட்டார். அவர் அரசு பணத்தை பல கோடி கையாடல் செய்தவர். தயாதேவதாசிடம் சம்பளம் வாங்குபவர். இதனை அனைவரும் http://www.beachminerals.org என்ற இணையதளத்தில் உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

வி.வி.நிறுவனத்திற்கு வழங்கபட்டுள்ள 48 உரிமங்களில் 44 உரிமங்கள் அவர்களது சொந்த நிலத்தில் வழங்கப் பட்டுள்ளது. இதே விக்டர் ராஜமாணிக்கமும் அவரது மனைவி பெயரில் உரிமம் பெற்று இதனை வி.வி.நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒரு பெரும் தொகை கேட்டு வருகிறார்.

வி.வி.நிறுவனத்திற்கும் இதர நிறுவனங்களுக்கும் சேர்த்து கேரளா, ஒரிசா, தமிழ்நாட்டில் என மொத்தம் 74 உரிமங்களை இந்திய அரசு வழங்கி உள்ளது என்பதை மத்திய துணை அமைச்சர் பாராளுமன்றத்தில் வினா எண் 1919-க்கு அளித்த பதிலில் தெரிந்துள்ளார். அதை இந்திய அரசு பாராளுமன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தற்போதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் தான் மணல் அள்ளுகிறார்கள். மீனவர்கள் தான் மணல் அள்ளி கொடுக்கிறார்கள். அந்த மீனவ பஞ்சாயத்து தலைவி இதனால் எந்த பாதிப்பும் இல்லை என பேசியதும் மேலே சொன்ன இணைய தளங்களில் உள்ளது. எனவே அதனையும் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அதிக விபரம் வேண்டும் என்றால்

www.beachminerals.org

www.coastalenvironmnet.org

www.sourthernmines.org

www.pmaed.org

https://www.facebook.com/vvmineral

இணையதளங்களில் உள்ள வீடியோக்கள் மற்றும் பிளாக்கில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சுற்றுச்சூழல் பற்றி பேசுவதற்கு முன்பு தயவு செய்து யோசியுங்கள். உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். மீன் பிடிக்கும் போது எத்தனை கடல் ஆமைகள் பிடிக்கப்பட்டு வெட்டப்படுகிறது. எத்தனை கடல் அட்டைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. இல்லை என நீங்கள் கூற முடியாமா??

மணல் அள்ள அனுமதி கொடுத்தது 2012-ம் வருடம். ஆனால் கடல் ஆமை இங்கு முட்டையிட வருவது 1974-க்கு பிறகே குறைந்து விட்டது. இதனை இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிக்கையிலேயே தெரிந்து கொள்ளலாம்.

3 சென்டி மீட்டருக்கு குறைவான தரம் உள்ள ஆக்டோபஸ் ஏற்றுமதி செய்யப்படக் கூடாது. ஆனால் ஆக்டோபஸ் குஞ்சுகளும், கடல் பசுவும், கடல் அட்டையும் பல்வேறு மீன்களின் பெயரில் சீ பூட் நிறுவனங்களால் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பவளப்பாறை தீவுகள் மற்றும் கடல்வாழ் அரிய மீன்கள் அனைத்தும் கடல் உள்ளே உள்ளது. கடல் உள்ளே உள்ள எந்த மீனும் கடலுக்கு வெளியே வந்து முட்டையிடுவதில்லை. உண்மையில் ஆண்டுக்காண்டு மீன் உற்பத்தி கூடிக் கொண்டு தான் வருகிறதே தவிர குறையவில்லை.

தாது மணலுக்கு எதிரான பிரச்சாரம் உள்நோக்கத்தோடு எழுப்பப் படுவது. இதன் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது. கல்வி கொள்ளையர்களும், மெகா கனிம கொள்ளையர்களும் சேர்ந்து திருமண்டல தேர்தல் தோல்வியால் சில கற்பூர புத்தி உள்ள கிரிமினல்களின் ஆலோசனையோடு ஊராட்சிமன்ற தேர்தலில் அடைந்த தோல்விக்கும் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததை ஊராட்சி கைப்பற்றியதற்கும் வி.வி.நிறுவனமே காரணம் என நினைத்து இந்த பிரச்சனையை உருவாக்கி வருகிறார்கள்.

நன்றி – எங்கள் ஊர் பெரியசாமிபுரம் முகநூலில் திரு.வெற்றிவேல் என்பவர் செய்த பதிவு

குறிப்பு – மேலே குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் இவை அனைத்திற்குமான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் வீடியோவாகவும் அரசு அலுவலக ஆவணமாகவும் உள்ளது.