தாது மணல் கொள்ளை நடை பெறுகிறது. சுனாமி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வளர்க்கப் பட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன. மயில்கள் வேட்டையாடப் படுகின்றன என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களான முகிலன் குடியிருப்பு, கிண்ணிக்கண்ணன் விளை, இலந்தையடிவிளையில் தாது மணல் கொள்ளை நடை பெறுகிறது. சுனாமி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வளர்க்கப் பட்ட மரங்கள் வெட்டப்படுகின் றன. மயில்கள் வேட்டையாடப் படுகின்றன. இது தொடர்பாக வைகுண்டராஜன் உட்பட 22 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட் டிருந்தது. இந்த மனு முதல் முறையாக விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட கடலோர கிராமங் களை பாதுகாக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி தலைமைச் செயலர், உள்துறை செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்ட கிராமங்களில் மணல் கொள்ளை நடைபெற வில்லை. மயில்கள், பறவைகள் வேட்டையாடப்படவில்லை. வைகுண்டராஜன் உட்பட 22 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இல்லை. என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதா கர், வி.எம்.வேலுமணி ஆகி யோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் குற்றச்சாட்டுகளை ஆட்சியரும், எஸ்.பி.யும் மறுத்துள்ளனர். எனவே வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. இந்த மனு பொதுநலன் சார்ந்தது அல்ல என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். நீதிமன்ற அவமதிப்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட் டது.

The Hindu Tamil

Courtesy : The Hindu Tamil

Link : http://goo.gl/MxYpXI 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.