
பருவநிலை மாற்றம் காரணமாக, அடுத்த 100 ஆண்டுகளில் பூமியின் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடல் மட்டத்தின் உயர்வு தடுக்க முடியாதது என்றும், ஆனால் அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது என்றும் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடு அரசுகளின் குழு கடல் மட்டம் உயர்வு பற்றி ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என்று கூறப்பட்டிருந்தது.
கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாக பகுதியில்,பனிப்பாறைகள் உருகியதால் கடந்த 1992 ஆம் ஆண்டு கடல்மட்ட அளவு, 3 அங்குலமாக உயர்ந்துள்ளது. உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரையிலான கடல் மட்ட உயர்வு அளவுகளைப் பார்க்கும்போது, இப்போதிருக்கும் வேகத்திலேயே பனிப் பாறைகள் உருகினால், நிச்சயமாக இன்னும் 100 அல்லது 200 ஆண்டுகளில் உலகளாவிய கடல் மட்டத்தின் அளவு 10 அடி உயரும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Courtesy : News7Tamil
Read more: http://ns7.tv/ta/sea-level-rise-next-100-years-nasa-information.html#ixzz3k5XjTyxj
தாது மணல் பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தென்மண்டல கட்டுமர மீனவர் இளைஞர் சங்கம் வரவேற்பு
தென்மண்டல கட்டுமர மீனவர் சங்க தலைவர் திரு.எம்.ராஜா பெர்னான்டோ அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழ்நாட்டில் தாது மணல் தொழில் சுதந்திரத்திற்கு முன்பாகவே தொடங்கி நடந்து வரும் தொழிலாகும். நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டியால் சில நபர்கள் பெரும் பண செலவில் இது பற்றி புகார்கள் அனுப்பி சில ஓய்வு பெற்ற அலுவலர்களின் மற்றும் சில ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் தலையீட்டால் ஒரு கட்டத்தில் அதாவது சுமார் 2 வருடங்களுக்கு முன்பு இந்த தொழில் நிறுத்தி வைக்கப் பட்டது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்ததோடு மீனவ மக்களும் சொல்லொண்ணா துயரத்திற்கு உள்ளானார்கள்.
இந்த தாது மணல் என்பது இயற்கையாக வெளியே கொண்டு தள்ளும் மணல். இதனை எடுக்காமல் விட்டால் சில பகுதிகளில் மணல் மேடுகளை உருவாக்கி விடும். இரண்டு வருடங்களாக தாது மணலை எடுக்காததால் தான் பல்வேறு பகுதிகளில் கடலில் மணல் மேடுகள் உருவாகி மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மணப்பாடு பகுதியில் இவ்வாறு மணல் மேடு உருவாகி மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் அரசு பிறகு ஜேசிபி இயந்திரங்களை கொண்டு இந்த மணலை அள்ளி அகற்றியது கடந்த 21.7.2015 அன்று எல்லா பத்திரிக்கைகளிலும் வெளியானது தெரிந்ததே!!
தாதுமணல் தொழில் நடந்து கொண்டு இருந்தால் இவ்வாறு மணல் மேடு உருவாகாது. எனவே மீனவர்களும் பாதிக்கப் பட மாட்டார்கள். இந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம்.
மேலும் ஒரு அதிகாரி அல்லாமல் ஒரு வடநாட்டு நீதிபதியை நியமித்ததால் இதில் அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமான ஒரு விசாரணை நடைபெறும். அனைவருடைய நலனும் கருத்தில் கொள்ளப்படும். எனவே இந்த வகையிலும் இதனை நாங்கள் வரவேற்கிறோம்.
Courtesy : http://www.dinamani.com/edition_thirunelveli/thirunelveli/2015/08/01/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/article2951823.ece

கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சனிக்கிழமை படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கம்போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்கியது.
திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 10 அடி உயரத்துக்கும் மேல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. இதனால் அங்கு பிற்பகல் 1 மணி வரை படகுகள் இயக்கப்படவில்லை.
கடல் சீற்றம் ஓரளவுக்குத் தணிந்ததையடுத்து, பிற்பகல் 1.15 மணி முதல் மாலை 4 மணி வரை திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் இயக்கப்பட்டன. விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.
படகுத்துறைக்குச் செல்ல நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர். படகு சேவை பாதிக்கப்பட்டதால் அவர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
Link : http://www.dinamani.com/tamilnadu/2015/07/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-/article2927958.ece
Study of past sea level changes shows coastal communities may face rises of at least six metres even if we limit global warming to 2C, reports Climate Central.

Sea level rises of eight inches have already worsened flooding effects from storms such as Hurricane Sandy. Photograph: John G Wilbanks/Alamy
Even if world manages to limit global warming to 2C — the target number for current climate negotiations — sea levels may still rise at least 6 meters (20 ft) above their current heights, radically reshaping the world’s coastline and affecting millions in the process.
That finding comes from a new paper published on Thursday in Science that shows how high sea levels rose the last time carbon dioxide levels were this high.
That was about 3m years ago, when the globe was about 3-5F warmer on average, the Arctic 14.4F warmer, megasharks swam the oceans, and sea levels stood at least 20 ft above their current heights.
The megasharks aren’t coming back but those sea levels could be, no matter what happens in December’s climate summit in Paris.

Now vs. 25 feet of sea level rise in Ocean Drive Miami
“Even if we meet that 2C target, in the past with those types of temperatures, we may be committing ourselves to this level of sea level rise in the long term,”Andrea Dutton, a geochemist at the University of Florida and one of the study’s co-authors, said. “The decisions we make now about where we want to be in 2100 commit us on a pathway where we can’t go back. Once these ice sheets start to melt, the changes become irreversible.”
The study examined past changes and laid out a framework for using them to refine our understanding of what the future holds for coastal communities. According to separate research by Climate Central, a 20-ft sea level rise wouldreshape the US coast, causing Louisiana to lose its boot and transforming the Bay Area into the Bays Areas by forming a second inland bay. It would also threaten the world’s coastal nations and megacities.