இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கடலரிப்பு உள்ளது. இந்தியாவின் மொத்த கடற்கரையில் சுமார் 20 சதவீதம் கடலரிப்பால் பாதிக்கப் பட்டுள்ளது.
இந்திய அரசு கடலரிப்பு இயக்குனரக தலைமை பொறியாளர் திருச்செந்தூர் பாராளுமன்ற உறுப்பினருக்கு எழுதிய கடிதத்தில் இந்தியாவில் 7516 கிலோ மீட்டர் கடற்கரை உள்ளது என்றும் இதில் 1350 கிலோமீட்டர் கடற்கரை கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கடலரிப்புக்கு குறிப்பாக கீழ்கண்ட காரணங்கள் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1) அலையின் வேகம் மற்றும் தாக்கம்
2) புவி வெப்பத்தால் கடல்நீர் மட்டம் உயர்வு
3) மழைகாலங்களில் கடற்கரை மணல் வெள்ளத்தால் கடல் உள்ளே அடித்து செல்லப்படுதல்
4) மழைக்காலங்களில் கடற்கரையில் வளரும் பசுமை தாவரங்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்படுதல்
5) மனிதர்களால் மீன்பிடி துறைமுகம் மற்றும் துறைமுகங்கள் கட்டுதல்
6) சரியாக திட்டமிடாமல் கடலரிப்பு தடுப்பு சுவர் கட்டுதல்
7) நீரோட்டத்திற்கு எதிராக குறைந்த அளவு மணல் வைத்து தடுத்தல்
அவர் தனது கடிதத்தில் இந்தியாவில் கடற்கரை உள்ள அனைத்து மாநிலங்களும் பெரும்பாலும் கடலரிப்பால் பாதிக்கப் பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.